இப்புவியில் வாழும் மனிதர் களின் அடிப்படைத் தேவைகளாக உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகியவை அமை கின்றன. இவற்றைப் பெற வேலையோ, வியாபாரமோ, தொழிலோ செய்து பொருளீட்ட வேண்டியுள்ளது. அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய மனிதன், அடுத்த கட்டமாக வாழ்க்கையில் முன்னேற்றங்கள் பெற்று மேலும் மேன்மை, புகழ் பெற விரும்புவதே இயற்கை.
அத்தகைய மேன்மையும் புகழும் நிலைத்து நீடிக்க சித்தர் பெருமக்கள் தக்க அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதாவது மனிதன் தன்னலத்தை மட்டுமே கருதாமல் பிறர் நலத்தையும் கருத்தில்கொண்டு, நற்காரி யங்கள் செய்து, தெய்வ சிந்தனையை யும் துணைக்கொண்டு செயல் பட்டால் மேன்மைகள் உறுதிப் படுத்தப்பட்டுவிடும் என்று கூறியுள்ளனர்.
சித்த மகாபுருஷர்கள் வான சாஸ்திரத்தை அடிப்படை யாகக்கொண்ட ஜோதிட சாஸ் திரத்திலும் வல்லுநர்களாகத் திகழ்ந் தார்கள் என்பதே உண்மை.
அதன்படி மூன்று கிரகங்களுக்கு ஒரு முக்கோண வடிவம் என்ற அமைப்பில் மொத்தம் மூன்று முக்கோண வடிவங்களில் அமைத்தார்கள். இந்த முக்கோண வடிவங்கள், அந்தந்த கிரகங்கள் எந்தெந்த ராசி மண்டல வீடுகளில் "உச்சம்' என்ற உன்னத நிலையைப் பெறுகின்றனவோ அவற்றின் அடிப்படையில் அமைகின்றன.
முதல் முக்கோண வடிவில் அமையும் கிரகங்கள்
சூரியன் உச்சம்பெறும் மேஷ மண்டல வீடு.
சந்திரன் உச்சம்பெறும் ரிஷப மண்டல வீடு.
குரு உச்சம்பெறும் கடக மண்டல வீடு.
இரண்டாவது முக்கோண வடிவில் அமையும் கிரகங்கள்
ராகு உச்சம்பெறும் மிதுன மண்டல வீடு.
புதன் உச்சம்பெறும் கன்னி மண்டல வீடு.
சுக்கிரன் உச்சம்பெறும் மீன மண்டல வீடு.
மூன்றாவது முக்கோண வடிவில் அமையும் கிரகங்கள்
கேது உச்சம்பெறும் தனுசு மண்டல வீடு.
சனி உச்சம்பெறும் துலாம் மண்டல விடு.
செவ்வாய் உச்சம்பெறும் மகர மண்டல வீடு.
மேற்கூறிய ஒன்பது கிரகங்களும் ஒன்பது ராசி மண்டல வீடுகளில் உச்சம் என்ற நிலையைப் பெறுவதைக் காணமுடிகிறது. மேலும் குறிப்பிட்ட 1 முதல் 9 வரையிலான எண்களே வரிசையாக அந்தந்த கிரகங்களுக்குரிய எண்களாக அமைவதையும் அறிய முடிகிறது.
12 ராசி மண்டல வீடுகளில் மீதமுள்ள மூன்று வீடுகளில் (அதாவது சிம்மம், விருச் சிகம், கும்பம்) எந்த கிரகமும் உச்ச நிலைப்பாடு பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் நிழல் கிரகங்களான ராகு- கேதுக் களுக்கு உச்ச வீடுகள் அமைவது பற்றி வேறு பாடான கருத்துகள் உள்ளன. எனினும் சித்தர் புருஷ வாக்கிப்படியும், புகழ்பெற்ற ஜோதிட மாமேதை பெங்களூர் வெங்கட்ராமன் அவர்களின் பரிந்துரைப்படியும், ராகுவுக்கு மிதுன வீடும், கேதுவுக்கு தனுசு வீடும் உச்ச நிலை வீடுகளாக கருத்தில் கொள்ளப் பட்டன.
இவ்வாறு ஒன்பது கிரகங்களையும் அவற்றின் உச்சம் நிலைபெற்ற ராசி மண்டல வீடுகளையும் கொண்ட- மூன்று முக்கோண வடிவங்களையும் இணைத்த முப்பரிமாண எந்திர வடிவமே சித்தர்கள் அருளிய புகழ்பெற்ற வடிவமைப்பு.
வாழ்க்கையில் நிலையான, நீடித்த முன்னேற்றம், மேன்மை, புகழ்பெற விரும்பும் மனிதர்கள் மேற்கூறிய அரிய முப்பரிமாண எந்திர வடிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தூயவெள்ளியில் சிறிய அளவில் இந்த எந்திரத் தைத் தயார் செய்துகொள்ளலாம்.
எந்திரத்தின் நடுவில் அவரவர் ஜாதகத் திலுள்ள பலம்பெற்ற கிரகத்திற்குரிய நவரத் தினக் கல்லைப் பதித்துக் கொள்ளலாம். அப்படி கல் பதித்த வெள்ளி எந்திரத்தை இல்லத்தில் அன்றாடம் வழிபடும் தெய்வ உருவின் முன்வைத்து, பின்னர் ஒரு நல்ல நாள், நேரத்தில் மார்பில் படும்படி அணிந்து கொள்ள லாம். முழு நம்பிக்கை மற்றும் தெய்வ சிந்தனையுடன் செயல்பட்டால் நலங்கள் மேன்மேலும் பெருகுவது உறுதி.
செல்: 74485 89113